2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மீன் வியாபாரிக்கு கடூழிய சிறை தண்டனை

Thipaan   / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சுன்னாகம் மீன்சந்தையில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மீன் வியாபாரிக்கு, 2 மாதகால கடூழியச் சிறைதண்டனை விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை (20) தீர்ப்பளித்தார்.

10 கிராம் கஞ்சாவை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) அளவெட்டியைச் சேர்ந்த மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

வியாபாரியை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பொலிஸார், இவர் மீது ஏற்கெனவே கசிப்பு விற்பனை தொடர்பில் மூன்று குற்றங்கள் பதிவாகியுள்ளமையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

வழக்கை விசாரித்த நீதவான், மீன்வியாபாரிக்கு கடூழியச் சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .