Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதி ஏற்று நீர்ப்பாசனத்திட்டத்தில் பயிர்ச் செய்கை செய்யாதவர்களுக்கு, அக்கராயன்குளத்தின் கீழான சிறுபோக நெற்செய்கைக்கான அனுமதி எதிர்காலத்தில் வழங்கப்படமாட்டாது என கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன், செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
அக்கராயன் குளத்திலிருந்து ஸ்கந்தபுரத்துக்கான ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற போதிலும் ஏற்று நீர்ப்பாசனத்திட்ட பகுதியில் அமைந்துள்ள காணிகளில் சில குடும்பங்கள் வசிக்காமையினால் ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் முழுமையாக செயற்படவில்லை.
ஏற்று நீர்ப்பாசனத்திட்டத்தில் செய்கை செய்யாதவர்களுக்கு, அக்கராயன் குளத்தின் கீழ் சிறுபோக செய்கை செய்வதற்கான அனுமதி எதிர்காலத்தில் இரத்துச் செய்யப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 Jul 2025