Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஏப்ரல் 21 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
ஐ.நா விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கட்டாயம் வெளியிடப்படும். எக்காரணம் கொண்டும் உள்ளக விசாரணையை ஏற்றக்கொள்ள முடியாது. உள்ளக விசாரணையில் இலங்கை அரசாங்கம் எத்தகைய தில்லுமுல்லுகளை செய்யும் என்பது எமக்குத் தெரியும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
ஏழு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட சிவாஜிலிங்கம், அந்த நாடுகளின் விஜயம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று செவ்வாய்க்கிழமை (21) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், சுவிற்சலாந்து, பெல்ஜியம், இத்தாலி, nஐர்மனி உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். ஜெனிவாவுக்கும் சென்றிருந்தேன். 100 நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்ததுடன், 30 நாடுகளின் பிரதிநிதிகளுடன் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் முழுமையாக கதைக்கக்கூடியதாகவிருந்தது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகள் அமைப்பு அலுவலகத்திலும் இந்த சந்திப்பக்களை மேற்கொண்டோம். இதன் முக்கியமான பெறுபேறுகளை புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கும் தெரிவித்துள்ளேன்.
ஐ.நா அறிக்கை மார்ச் மாதம் கொண்டுவரப்படுவதாக இருந்து பிற்போடப்பட்டது. இதில் தமிழர் தரப்பு உறுப்பினர்களுடைய பங்களிப்பும் இருந்தது. எமது ஆட்சேபனையையும் கவலையையும் தெரிவித்து, நேரடியாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளருடன் சந்திப்பதாக இருந்தது. கடைசி நிமிடத்தில் அவர் வரமுடியாத நிலையில் அவருடைய சிறப்பு பிரதிநிதியுடன் சந்திப்பை மேற்கொண்டோம்.
காணமற்போனவர்கள் சரணடைந்தவர்கள் சம்பந்தமான விசாரணையை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவியையும் சந்தித்து கலந்துரையாடினோம். அவர் இங்கு வந்து 10 நாட்கள் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளார்;.
ஐ.நா அறிக்கையில் காத்திரமான பலவிடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகள் விட்ட தவறுகள், பிழைகள் சம்பந்தமாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையிலே சிபார்சு என்ற விடயத்தை மாற்றி எழுதலாம் இல்லாவிட்டால் அறிக்கையை மட்டும் சமர்ப்பிக்கலாம்.
அடுத்த கட்டமாக இந்த விடயத்தில் அமெரிக்கா போன்ற வேறு ஒரு உள்ளக விசாரணையை மேற்கொள்ளலாம் எனவும் அதனை மேலைத்தேசங்கள் கண்காணிக்கலாம் எனவும் குறிப்பிடலாம். இது பெரும் ஆபத்து, இந்த ஆபத்தை நாம் எல்லோரும் எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. தாயகத்தில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் உலக நாடுகளுடனும் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும்.
கவனயீர்ப்பு போராட்டங்கள், அழுத்தங்களை கொடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 Jul 2025