Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியை சேர்ந்த 10 வயதுச் சிறுவன், கடந்த திங்கட்கிழமை(20) வீட்டிலிருந்து சென்ற நிலையில் செவ்வாய்க்கிழமை(21) மதியம் யாழ். நகரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளான்.
சகோதரன் தன்னை ஏசிவிட்டார் என்பதால் திங்கட்கிழமை (20) மதியம் வீட்டிலிருந்து தனது உடுப்புக்கள் அடங்கிய பையை தூக்கியவாறு குறித்த சிறுவன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளான்.
இதன்போது, கை விஷேச தினத்தில் உறவினர்கள் வழங்கிய 2,500 ரூபாய் பணத்தையும் தன்னுடன் எடுத்துச்சென்றுள்ளன்.
இதனைகயடுத்து சிறுவனை தேடிய உறவினர்கள்;, இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.
இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஒரு நபர், சிறுவனை செவ்வாய்க்கிழமை (21) காலை யாழ.; நகரத்தில் கண்டு, சிறுவனை பிடித்து உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
தான் இரவு முழுவதும் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இருந்ததாகவும், தன்னை தனது சகோதரன் மற்றும் சிலர் பேருந்து நிலையத்துக்கு தேடி வருகையில் பேருந்து நிலைய இருக்கைகளுக்கு கீழ் ஒளிந்திருந்தாக சிறுவன் கூறினான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
41 minute ago
57 minute ago
1 hours ago