Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்ட காணிகளை துப்பரவு செய்து கொடுப்பதற்கும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
பல வருடங்களாக பாவனையின்றிக் கிடந்த பகுதிகளே இப்போது மீள் குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளன. எனவே, இவற்றை முற்று முழுதாக துப்பரவு செய்யக்கூடிய வசதிகள் எமது மக்களிடம் இல்லாத நிலையில், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, காணிகளை விரைவாகத் துப்புரவு செய்து கொடுப்பதற்கு அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், துப்பரவு செய்யப்படுகின்ற பகுதிகளில் மக்கள் மீள்குடியேறுவதற்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளையும் புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மேற்கொள்வதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென டக்ளஸ் தேவானந்தா, அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 Jul 2025