2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வன்னேரிக்குளம் வைத்தியசாலையில் வைத்தியர் இல்லை

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் வைத்தியசாலை கடந்த 8 ஆண்டுகளாக நிரந்தர மருத்துவர் இல்லாமல் இயங்கிவருகின்றது. கரைச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வன்னேரிக்குளம் கிராமத்தில் தற்போது சுமார் 500 குடும்பங்கள் வசிக்கின்றன.

இந்த மருத்துவமனையில் சுமார் 25 ஆண்டுகள் வைத்தியராக பணிபுரிந்தவர்கள் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் இடமாற்றம் பெற்றுச் சென்றார். அதன் பின்னர் இந்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படவில்லை.

அக்கராயன் மருத்துவமனையில் வைத்தியர் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இந்த வைத்தியசாலையில் வருகை தருகின்றார். இந்தப் பகுதி மக்கள் மிகுதி நாட்;களில் அவசர வைத்திய தேவைக்காக 10 கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும் அக்கராயன் வைத்தியசாலைக்கு செல்லவேண்டும்.

வடமாகாணத்திலுள்ள 31 வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் இல்லையென்றும் இது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் வைத்தியர்களை நியமித்துத் தருவதாக உறுதியளித்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .