2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மகேஸ்வரி நிதியத்துக்கு எதிராக பாரவூர்தி சங்கத்தினர் போராட்டம்

George   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா

மகேஸ்வரி நிதியம் தமது அங்கத்துவ பணத்தை மீளக்கையளிக்காது ஏமாற்றி வருவதாகக்கூறி யாழ். மாவட்ட பாரவூர்தி சங்கத்தால் யாழில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று, புதன்கிழமை (22) முன்னெடுக்கப்பட்டது

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின்   செயலாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம், வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார ஆகியோரிடம் யாழ். மாவட்ட பாரவூர்தி சங்கத்தலைவர் அ.ஜெயக்குமார் மகஜர் கையளித்தார்.

மகேஸ்வரி நிதியத்துக்கு மணல் ஏற்றி இறக்குவதற்கு யாழ். மாவட்ட பாரவூர்தி சங்கத்தின் பாரவூர்திகளைப் பயன்படுத்தும் பொருட்டு, பாரவூர்தி உரிமையாளர்களிடம் இருந்து வைப்புப் பணத்தை மகேஸ்வரி நிதியம் பெற்றது. ஒவ்வொரு முறை மணல் ஏற்றி இறக்கும்போதும் ஒரு தொகை கட்டுப்பணம் நிதியத்தால் அறவிடப்பட்டது.

575 பாரவூர்தி உரிமையாளர்கள் இதற்காக பதிவு செய்திருந்தனர்;. எனினும் சிலகாலங்களிலே மகேஸ்வரி நிதியத்தினர் பாரவூர்த்தி சங்கத்தின் பாரவூர்திகளில் மணல் ஏற்றுவதை தவிர்த்தனர்.

இதனையடுத்து, தங்களின் கட்டுப்பணம், வைப்புப்பணம் ஆகியவற்றை தருமாறு கோரினர். 50   பணம் மீளக்கொடுக்கப்பட்டது,  எனைய பாரவூர்திகளுக்கான   பணம் மீளக்கொடுக்கப்படவிவ்லை.

  இதனைக் கண்டித்து பாரவூர்தி சங்கம்  2 தடவைகள் ஏற்கனவே போராட்டம் நடத்தியது. மகேஸ்வரி நிதியத்தினர் தங்களுக்கு தரவேண்டிய 19.775 மில்லியன் ரூபாய் நிதியை உடனடியாக தரவேண்டும் என்று கூறி மீண்டும் புதன்கிழமை (22) ஆர்ப்பாட்ட பேரணி செய்தனர்.

'நாங்கள் றோட்டில் அவர்கள் ஏசி அறையில்', 'மாவட்டச் செயலாளரே மகேஸ்வரி நிதியத்துக்கு பதிவு உள்ளதா?','முன்னாள் அமைச்சரே உங்கள் ஆட்சியில் எங்கள் வாகனம் இரும்புக் கடையில், நம்பினோம் ஏமாந்தோம் நமக்கு வேண்டும் தீர்வு' ஆகிய சுலோகங்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் தாங்கிச் சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .