2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இறப்பர் வெடிமருந்துடன் இருவர் கைது

Gavitha   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். நீர்வேலி பகுதியில் தடை செய்யப்பட்ட இறப்பர் வெடிமருந்துகளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (21) கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்.என்.கே.ஜெயசிங்க புதன்கிழமை (22) தெரிவித்தார்.

சந்தேகநபர்களிடமிருந்து 9 கிலோ 416 கிராம் இறப்பர் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார், கூலித் தொழிலாளியாக பணிபுரியும் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், நான்கு பைகளில் இருந்த வெடிமருந்துகளையும் கைபற்றியதாக பொறுப்பதிகாரி கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .