Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 22 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ்.மீசாலை பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 06ஆம் திகதி, சிறிய ரக உழவு இயந்திரம் ஒன்றை மோதி அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரை படுகாயமடையச் செய்த வான் சாரதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கவேண்டும் என சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் புதன்கிழமை (22) உத்தரவிட்டார்.
சிறிய ரக உழவு இயந்திர சாரதிக்கு 1 இலட்சம் ரூபாயும் அதன் உதவியாளருக்கு 10 ஆயிரம் ரூபாயும் நட்டஈடு வழங்கவேண்டும் என்றும் விபத்துக்கு காரணமாகவிருந்தமைக்காக 9 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் எனவும் நீதவான் வான் சாரதிக்கு உத்தரவிட்டார்.
இந்த விபத்தில் சிறிய ரக உழவு இயந்திர சாரதி பி.பிரகாஸ் மற்றும் உதவியாளரான சிவஞானம் செல்வரூபன் ஆகியோர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
மோதிய வானின் சாரதியைக் கைது செய்த பொலிஸார், சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாரதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கின் தீர்ப்பு வாசிப்பு புதன்கிழமை (22) வாசிக்கப்பட்ட போதே நீதவான் மேற்படி தீர்ப்பை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago