Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
George / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் துறைகளில் நிலவும் பல்வேறு பதவி வெற்றிடங்களை நிரப்பும் வகையில் வணிகர் கழகத்தால் வியாழக்கிழமை (23) முதல், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக யாழ்.மாவட்ட வணிகர் கழகத்தின் தலைவர் எஸ்.ஜெயசேகரம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ். மாவட்டத்திலுள்ள தனியார் துறைகளில் நிலவும் பல்வேறு பதவி வெற்றிடங்களை நிரப்பும் வகையில் வணிகர் கழகத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டு இடைவெளியின் பின்னர் மீண்டும் யாழ். மாவட்டத்தில் உள்ள இளைஞர், யுவதிகளிடம் இருந்து பதவிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கையின் மூலம் பல இளைஞர், யுவதிகளும் அதேவேளை அரச அலுவலகங்களில் இருந்து ஓய்வுபெற்றவர்களும் கூட தனியார்துறைகளில் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.
கணினி துறை, விற்பனையாளர்கள், வெளிக்கள அலுவலர், கணக்கு பதிவாளர்கள், லிகிதர்கள் , விற்பனை பிரதிநிதிகள், சாரதிகள் என பல பதவிகளுக்கும் தனியார் துறையில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு தொழில் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்ட சம்பளத்திலும் பார்க்க அதிகரித்த சம்பளத்தை பெறக்கூடிய வாயப்புக்களும் காணப்படுகின்றன.
தனியார் துறையில் வேலை செய்யக்கூடிய மனநிலை உடையவர்கள் மட்டும் விண்ணப்பங்களை மானிப்பாய் வீதியிலுள்ள வணிகர் கழக அலுவலகத்தில் நேரடியாகவோ அன்றி தபால் மூலமாகவோ முழு விபரத்துடன் தாம் விரும்பும் தொழிலையும் குறிப்பிட்டு அனுப்ப முடியும் என அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago