2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அம்பலப்பெருமாள் ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு மகஜர்

George   / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அம்பலப்பெருமாள்குள கிராமத்தின் ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரி, அப்பகுதி கிராம மக்கள் துணுக்காய் பிரதேச செயலாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு புதன்கிழமை(22) மகஜர் கையளித்துள்ளனர்.

1968ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கிராமத்தில் சுமார் 115 குடும்பங்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் வாழ்வாதாரமாக விவசாய காணப்படுகின்றது. 

நெற்செய்கையுடன் மேட்டுநிலப் பயிர்ச் செய்கையையும் இ;ந்தப் பகுதி மக்கள் மேற்கொள்கின்றனர். இதனால் ஏற்றுநீர்ப்பாசனத் திட்டம் நடைமுறைப்படுத்துவதன் மூலம் மேட்டு பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியும் என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .