2025 ஜூலை 09, புதன்கிழமை

20 வருடங்களின் பின்னர் பாவனைக்கு விடப்பட்ட வெளிச்சவீடு

Gavitha   / 2015 மே 04 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை முனைப்பகுதி வெளிச்சவீடு சுமார் 20 வருடங்களின்  பின்னர் வெசாக் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (03) முதல் மக்கள் பாவனைக்காக விடப்பட்டுள்ளது.

நீண்டகால வரலாற்று சின்னங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெளிச்சவீடு வடமராட்சி பிரதேசத்தின் மிகமுக்கியமான வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகும். நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இதனை பார்வையிட முடியாமல் இருந்து வந்தது.

இப்போதும் இப்பிரதேசம் பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் இருந்து வருகின்றது. இந்நிலையில் இதனை மக்கள் பார்வையிடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை (03) இராணுவத்தினர் அனுமதி வழங்கினார்கள். இதனையடுத்து பெருமளவான மக்கள் அந்த வெளிச்சவீட்டின் மேல் தளத்துக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .