Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 மே 04 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரந்தாய்க் குளத்தை சுற்றுலா மையமாக மாற்றும் வேலைகள், வடமாகாண சபையின் சுற்றுலா வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாக வடமாகாண சபையின், கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் பசுபதி அரியரட்ணம் தெரிவித்தார்.
கரந்தாய்க் குளத்தை சுற்றுலா மையமாக உருவாக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தால் கரந்தாய் குளத்தை சுற்றுலா மையமாக உருவாக்குவதென முடிவெடுக்கப்பட்டது.
இதுவரை எவ்வித வேலைகளும் முன்னெடுக்கப்படவில்லை. பச்சிலைப்பள்ளியின் இயற்கை எழிலுடன் கூடிய வகையில் கரந்தாய்க்குளம் விளங்குகின்றது.
எவ்வாறான கடுமையான வரட்சி ஏற்பட்டாலும் இக்குளம் வற்றுவதில்லை. இந்நிலையில் இக்குளத்தை ஒரு சுற்றுலா மையமாக உருவாக்குவதன் மூலம் ஏ - 9 சாலையில் பயணிப்பவர்கள் இந்தக் குளத்தை நாடிச் செல்வதற்கான வாய்ப்பேற்படும்.
இக்குளம் ஏன் புனரமைக்கப்படவில்லையென வடமாகாண சபை உறுப்பினர் பசுபதி அரியரட்ணவிடம் கேட்டபோது,
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் கரந்தாய் குளத்தையும் சுண்டிக்குளம் பகுதியிலும் சுற்றுலா மையங்களை உருவாக்குவதென தீர்மானித்து, சூழல் சுற்றாடல் அமைச்சுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டு அவை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதுவரை எந்தவிதமான வேலைகளும் இடம்பெறவில்லை. வடமாகாண சபையின் சுற்றுலா மையங்களையும் உருவாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்காலத்தில் கரந்தாய்க்குளமும் சுற்றுலா மையமாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
50 minute ago
59 minute ago