Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Gavitha / 2015 மே 04 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி, கண்டாவளையின் கல்லாறு கிராமத்தின் பொதுக் குழாய் கிணறு பழுதடைந்திருப்பதன் காரணமாக அந்தக் கிராம மக்கள் 5 கிலோமீற்றருக்கு அப்பால் சென்று குடிநீரைப் பெறவேண்டிய நிலையிலுள்ளனர்.
இந்தக் கிராமத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டச் செயலக இடர் முகாமைத்து பிரிவினரால் குழாய் கிணறு அமைக்கப்பட்டு, பொதுமக்களின் பாவனைக்கு கொடுக்கப்பட்டது. இந்தக் குழாய்க் கிணறு தற்போது பழுதடைந்துள்ளது.
இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட இடர்முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கு.சுகுணதாஸிடம் கேட்டபோது,
குழாய் கிணறு பழுதடைந்தமை தொடர்பில் எம்மிடம் எவ்விதமான முறைப்பாடுகளும் தெரிவிக்கப்படவில்லை.
கண்டாவளை பிரதேச செயலகத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தால் பிரதேச செயலகம் தான் குறித்த குழாய் கிணற்றை புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
40 minute ago
45 minute ago