2025 ஜூலை 09, புதன்கிழமை

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 மே 05 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் மின்சாரம் தாக்கி  ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (05) உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை, நெடியகாடு பகுதியை சேர்ந்த சிவனடியார் நவரட்ணம் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்;.

வல்வெட்டித்துறை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுவருவதால், இவர் அங்கு  தண்ணீர் பந்தல்  அமைந்திருந்தார். இந்த நிலையில்,வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு  முன்பாகவுள்ள  வீதிக்கு இவர்  தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த மின்சார வயரில் தண்ணீர் பட்ட நிலையில்  இவர் மின்  தாக்குதலுக்கு உள்ளானார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம்  ஊறணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .