2025 ஜூலை 09, புதன்கிழமை

எழுவைதீவில் உபபொலிஸ் நிலையம் அமைக்க கோரிக்கை

Sudharshini   / 2015 மே 05 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

எழுவைதீவிலுள்ள மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு உபபொலிஸ் நிலையமொன்றை அமைக்க வேண்டும் என வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜெயசிங்கவிடம், வேலணை பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளா சதீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

எழுவைதீவில் பொலிஸ் நிலையம் இல்லாததால் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாதுள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்தப் பகுதிக்கு விஜயம் செய்து மக்களுடன் கலந்துரையாடி உபபொலிஸ் நிலையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதனை கவனத்தில் எடுத்து செயற்படுவதாகவும், பிரதி சனிக்கிழமைகளில் எழுவைதீவில் பொலிஸ் நடமாடும் சேவை ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் மா அதிபரி உறுதியளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .