Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
George / 2015 மே 05 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் வியாபார அதிகரிப்பு தொடர்கின்றது. இது தொடர்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்ற சிவில் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், போதைப்பொருள் விற்பனையாளர்கள் தினமொரு வாகனங்களில் பாடசாலைக்கு அருகில் வந்து போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். ஆகையால் அவர்களை சரியான முறையில் அடையாளங் கண்டுகொள்ள முடிவதில்லை. இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
யாழ். வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் கருத்துக்கூறுகையில்,
கிராமிய மட்டத்திலும் போதைப்பொருள் அதிகரித்துள்ளது. இதனை யார் விற்கின்றார்கள், எங்குள்ளது என்பது பற்றி கிராமிய மட்ட அமைப்புக்களுக்கு தெரிகின்றது. ஆனால் அவர்கள் முறைப்பாடு செய்வதற்கு பயப்படுகின்றார்கள்.
அவ்வாறு முறைப்பாடு செய்து குற்றம் சுமத்தப்பட்டவர் பிணையில் வெளிவந்து, தன்னை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பதை அறிந்துகொள்கின்றார். இதனால் முறைப்பாடு செய்தவருக்கு பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.
இதனால் தகவல்கள் தருபவரின் பாதுகாப்பு பேணப்பட்டு, அவரது இரகசியமும் பேண பொலிஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
இதற்கு வடமாகாணப் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க பதிலளிக்கையில்,
போதைப்பொருள் தொடர்பில் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான தகவல்களை தருபவர்கள் பயப்படக்கூடாது. கீழ்மட்ட அதிகாரிகளை விடுத்து எனக்கு நேரடியாக தெரியப்படுத்த முடியும். அதன்மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கும், முறைப்பாட்டாளர்களின் பாதுகாப்பும் பேணப்படும்.
071 8591005 என்ற எனது தொலைபேசி இலக்கத்துடனும், anjala1961@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடு தெரிவிக்க முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
8 hours ago
8 hours ago