2025 ஜூலை 09, புதன்கிழமை

பல்கலைக்கழக வாகன சாரதிகளுக்கு கொடுப்பனவு வழங்கவில்லையென முறைப்பாடு

Sudharshini   / 2015 மே 06 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பல்கலைக்கழக வாகன சாரதிகளின் கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்கத்திடம் சாரதிகள் புதன்கிழமை (06) முறையிட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து 5 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும்;, தங்களுடைய கொடுப்பனவை வழங்காது பல்கலைக்கழக நிர்வாகம் இழுத்தடித்து வருவதாகவும் தமக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சாரதிகள் எழுத்துமூலமான முறைப்பாட்டை தெரிவித்துள்ளர்.

பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடி உரிய கொடுப்பனவுகளை சாரதிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .