2025 ஜூலை 09, புதன்கிழமை

டைனமேட் வைத்து மீன்பிடித்தவர்களுக்கு பிணை

Menaka Mookandi   / 2015 மே 07 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், குருநகர், வென்புறவிநகர் பகுதியில் டைனமேட் வெடிவைத்து மீன்பிடித்த மீனவர்கள் மூவரையும் படகுகளையும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் விடுவிக்க ஊர்காவற்றுறை நீதவான் செல்வநாயகன் லெனின்குமார், புதன்கிழமை (06) அனுமதியளித்தார்.

மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மீன்களை நாரா நிறுவனத்துக்கு பரிசோதனைகளுக்காக அனுப்பி, அடுத்த வழக்குத் தவணையின் போது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் கடந்த 2 ஆம் திகதி நடத்திய சோதனை நடவடிக்கையில் டைனமேட் வெடிவைத்துப் பிடித்த மீனவர்கள் மூவரையும் பிடித்ததுடன், அவர்கள் வசமிருந்த இரண்டு படகுகள், வள்ளம், வெடிவைத்து பிடிக்கப்பட்ட 80 கிலோகிராம் மீன் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

நீரியல் வளத்துறை அதிகாரிகள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .