2025 ஜூலை 09, புதன்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

George   / 2015 மே 07 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

புத்தூர் சுன்னாகம் வீதியில் வியாழக்கிழமை (07) இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி,டி.ஜீ.தனுஸ்க பிரசன்னா தெரிவித்தார்.

அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த தங்கராசா ஸ்ரீகுமார் (வயது 23), ஆவரங்கால் மேற்கை சேர்ந்த பத்தகாந்தன் ஜெனிந்தன் (வயது 21) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர்.

பேரூந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொறுப்பதிகாரி கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .