Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மே 08 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், நா.நவரத்தினராசா
யாழ்.தலைமை பொலிஸ் நிலையம் ஆறு மாத காலத்துக்குள் புதிய கட்டடத்துக்கு மாற்றப்படும். தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள கட்டடத்தை கையகப்படுத்த வேண்டிய தேவை இல்லை என வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜயசிங்க தெரிவித்தார்.
காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, தற்போது யாழ். பொலிஸ் நிலையம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணியை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபற்றி கூறுமாறு ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'யாழ். தலைமை பொலிஸ் நிலையத்துக்கு என துரையப்பா விளையாட்டரங்கின் அருகாமையில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு வருகின்றது. ஆறு மாத காலத்துக்குள் அதன் பணிகள் நிறைவடைந்து புதிய கட்டடத்துக்கு பொலிஸ் நிலையம் மாற்றப்பட்டு விடும். அதன் பின்னர் தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள கட்டடம் தேவைப்படாது' என்றார்.
அதற்கு ஊடகவியலாளர் பொலிஸ் நிலையம் புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள கட்டடம் அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்படுமா என கேட்டபோது, அது தொடர்பில் தன்னால் கூற முடியாது எனவும் அதனை பொலிஸ் மா அதிபரே கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மாணவர்களை கொலை செய்யும் நோக்கில் தாங்கியில் நஞ்சு கலக்கப்படவில்லை
இதேவேளைஈ யாழ்ப்பாணம், ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்தவர்கள், மாணவர்களை கொலை செய்யும் நோக்குடன் கலக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்தமை தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். நீர்த்தாங்கியில் கலக்கப்பட்ட நஞ்சின் அளவு உயிர் போகும் அளவுக்கு அடர்த்தியாக இல்லை. மாணவர்களை கொலை செய்யும் நோக்குடன் கலக்கப்படவில்லை. நஞ்சு வேறு நோக்கத்துடனேயே கலக்கப்பட்டுள்ளது என்றார்.
ஊடகவியலாளர்கள் சட்டம் கற்ற வேண்டும்
ஊடகவியலாளர்கள் நீதி மற்றும் சட்டங்களை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், இதன்போது கோரிக்கை விடுத்தார்.
ஊடகவியலாளர்கள் சட்டங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு சட்டம் மற்றும் நீதியை கற்றுக்கொடுத்தவர்கள் செல்வகுமார் மற்றும் தமிழ்மாறன் எனும் இரு தமிழ் பேராசிரியர்கள். அவர்கள் எனக்கு மட்டுமல்ல இலங்கையிலுள்ள பல பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் அவர்களே சட்;டம் கற்றுக்கொடுத்துள்ளார்கள்.
இரு தமிழ் பேராசிரியர்களிடம் இருந்தும் நாம் பயன்பெற்றுக் கொண்டோம். நீங்கள் தமிழர்களாக இருந்தும் அவர்களிடம் இருந்து பயன் பெறவில்லை. ஊடகவியலாளர்கள் அவர்களிடம் சட்டம் மற்றும் நீதியை கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
பொலிஸார் செய்யும் நல்ல வேலைகளை பாராட்டி செய்தி அறிக்கையிடுங்கள். அவர்கள் உங்களுடன் நல்லுறவை பேணுவார்கள். தவறாக செய்திகளை அறிக்கையிட்டால் அவர்களும் உங்களுடன் தவறாகவே நடக்க முயல்வார்கள்.
ஒரு சில பொலிஸார் செய்யும் தவறை பெரிதுபடுத்தி செய்தி அறிக்கையிட்டால் பொலிஸார் உங்களை தவறாகத்தான் எண்ணுவார்கள். தவறு செய்யும் மனநிலை எல்லோருக்கும் உண்டு. ஒன்று இரண்டு பொலிஸார் செய்யும் தவறை பெரிதுபடுத்தாதீர்கள். கீழ் மட்டங்கள் தவறிழைத்தால் அதனை அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிடுங்கள்.
அவர் அதற்கு நடவடிக்கை எடுக்காவிடின் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு தெரியப்படுத்துங்கள். அதற்கும் நடவடிக்கை இல்லை எனில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தெரியப்படுத்துங்கள்.
இவர்கள் எவருமே நடவடிக்கை எடுக்காவிடின் என்னிடம் தெரியப்படுத்துங்கள். என்னிடம் தெரியப்படுத்தும் போது யார் யாருக்கு தெரியப்படுத்தினீர்கள் என்ற தகவல்களையும் தந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத அனைவர் மீதும் நான் நடவடிக்கை எடுப்பேன்.
தற்போதைய பொலிஸார் சட்டத்தை மட்டும் பேணுபவர்கள் அல்ல மக்களுடன் இணைந்து சமூக வேலைகளிலும் ஈடுபடுபவர்கள். அவர்கள் செய்யும் நல்ல விடயங்கள் தொடர்பிலும் பாராட்டி செய்தி அறிக்கை இடுங்கள் என ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago