2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இல.கணேசன் - சி.வி.கே சந்திப்பு

Menaka Mookandi   / 2015 மே 08 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை கொழும்பில் வியாழக்கிழமை (07) சந்தித்துக் கலந்துரையாடினார்.

வடமாகாணத்தின் பொருளாதார கட்டுமாணங்களை மேம்படுத்தல், போரால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்வாதார உதவிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு இந்திய அரசாங்கம் வடக்கு மாகாணத்துக்கு உதவி செய்யவேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட இல.கணேசன் இந்தியா திரும்பியதும் இந்த விடயங்கள் தொடர்பில் உரிய அமைச்சர்களுடன் கலந்துரையாடி நல்லதொரு பதிலை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

அண்மையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட தீர்மானங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய பகுதிகளிலும் உள்ளவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக பலாலி, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து இந்தியாவுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டும், வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக செயற்படுத்த வேண்டும், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் போக்குவரத்து வசதிகளை கருத்தில் கொண்டு தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க வேண்டும் ஆகிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இந்திய அரசாங்கம் உதவி செய்யவேண்டும் வேண்டும் என்று அவைத் தலைவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .