Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மே 10 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
எதிர்கால இளம் தலைமுறையினராகிய மாணவர்களுக்கு இன்றைய சூழ்நிலையில் வசதி, வாய்புகள், கற்றல் மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் எற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வசதி வாய்ப்புக்களை மாணவர்கள் சரிவர பயன்படுத்திக் கொண்டு அறிவாற்றல் மற்றும் படைப்பாக்கத்திறன் உடையவர்களாக உருவாகுவதுக்கு முயற்சிக்க வேண்டும் என வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலாளர் க.ஸ்ரீமோகனன் தெரிவித்தார்.
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் தெல்லிப்பழை பிரதேச கலசார பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவிதைப் பயிற்சிப் பட்டறையில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (09) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
எமது இயலுமைகளை மாற்றவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த கவிதைப் பயிற்சிப் பட்டறை நடத்தப்படுகின்றது. ஒவ்வொருவரும் தங்களுக்கிடையில் காணப்படுகின்ற திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஏற்படுத்தப்படுகின்ற வசதிகளையும் சந்தர்ப்பங்களையும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
எங்களுடைய காலம் யுத்த காலமாக காணப்பட்டது. இடப்பெயர்வுகளையும் அவலங்களையும் சந்தித்தமையால் இத்தகைய வசதிகளும் வாய்ப்புக்களும் அப்போது இருக்கவில்லை.
மாணவர்களாகிய உங்களுக்கு இன்றைய சூழ்நிலையில் வாய்ப்புகள் எற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வாய்ப்புக்களை சரிவர பயன்படுத்திக்கொண்டு உங்களது சிந்தனை ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
49 minute ago
54 minute ago