2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நினைவு கூறலுக்கான உரிமை தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2015 மே 10 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்

தமிழ் சிவில் சமூக அமையம் ஏற்பாடு செய்த நினைவு கூறலுக்கான உரிமை தொடர்பான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (10) யாழ்.பொது நூலகத்தில் இடம்பெற்றது.

தனிநபர் நினைவு கூறல், பொது நினைவு கூறல், நாட்டில் இதுவரையில் இடம்பெற்ற நினைவுகூறல் தொடர்பான அனுபவங்கள், அதிகாரத்தில் உள்ளவர்களால் சகிக்கக்கூடிய நினைவுகளுக்கு அனுமதித்ததும் சகிக்க முடியாத நினைவுகளுக்கு அனுமதி அற்று இருத்தல் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

தமிழ் சிவில் சமூக அமைப்பின் துணைப் பேச்சாளர் வணபிதா எழில் றாஜன், யாழ். போதனா வைத்திய சாலையின் இருதய சத்திர சிகிச்சை நிபுணுர் வைத்தியர் பூ.லக்ஷ்மன், மனித உரிமை செயற்பாட்டாளர் றொக்கி பெர்னாண்டோ, சிரேஷ்ட சட்டதரணி பவானி பொன்சேகா, யாழ். பல்கலைகழக சட்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஆகியோர்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .