Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மே 20 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டமை கண்டித்து புதன்கிழமை (20) யாழ்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் வைத்தியசாலைக்கு முன்பாகவும், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் ஆசிரியர் கலாசாலைக்கு முன்பாகவும், ஆர்ப்பாட்டம் செய்தனர் திருநெல்வேலி வர்த்தக சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
யாழ்.தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தொடர்ந்து ஊர்வலமாகச் சென்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மகஜர் கையளித்தனர்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் யாழ்ப்பாணக் கிளையினர் யாழ்.பொதுநூலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இந்த இரு ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலமாகச் சென்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்துடன் இணைந்து கொண்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
51 minute ago
58 minute ago