Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மே 20 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவி படுகொலை குற்றவாளிகளை யாழ். நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (20) கொண்டு வருவதையடுத்து அங்கு ஒன்றுகூடிய மக்களினால் நீதிமன்றப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
மாணவி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் மற்றும் சுவிஸ் நாட்டுப் பிரஜை ஆகியோரை யாழ். நீதிமன்றத்துக்கு இன்று கொண்டு வருவதாக அறிந்த மக்கள் அங்கு ஒன்றுகூடினர்.
மக்கள் ஒன்றுகூடியமையால் நீதிமன்ற அனைத்து வீதிகளும் மூடப்பட்டு, பாதுகாப்பு வேலிகள் போட்ட பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தினர் எனினும் வேலிகளுக்கு அருகில் கூடிய மக்கள் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோஷங்கள் எழுப்பினர். அதில் சிலர் நீதிமன்ற கட்டடத்துக்கு கற்களை வீசினர்.
இதனால் அங்கு மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
49 minute ago
56 minute ago