Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2015 ஜூன் 06 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
முன்பள்ளி ஆசிரியர்களின் நியமனங்கள் வேதனம் தொடர்பான நிரந்தர தீர்வுகளுக்கான ஒரு நியதிச்சட்டத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் சமர்ப்பித்து அதை விவாதத்துக்கு உட்படுத்தி முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்பள்ளி ஆசிரியர்கள் வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசாங்கத்துக்கு விடயங்களை தெரிவிக்க உள்ளோம் என வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களை வெள்ளிக்கிழமை (05), கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர். இதில் கருத்துத்தெரிவிக்கும் போதே கல்வியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற குறிப்பாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் காணப்படுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களின் சேவைகளையும் அவர்களின் அர்ப்பணிப்புக்களையும் நாம் அறிவோம். போர்க்காலத்திலும் அகதி முகாம்களிலும் கூட அதன் பின்னர் மீள்குடியேற்றத்தின் பின்னர் முன்பள்ளி ஆசிரியர்கள் குறைந்தளவு வேதனங்களுடனும் வேதனங்கள் இன்றியும் கற்பித்து வருவதை நாம் உணர்ந்துகொண்டுள்ளோம்.
இராணுவத்துணைப்படை நிர்வாகத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்கள் இயங்க முடியாது. அது துணைப்படையே தவிர முன்பள்ளி ஆசிரியர்கள் அல்ல. ஆகவே முன்பள்ளி ஆசிரியர்கள் என்ற கட்டமைப்புக்குள் வரவேண்டுமாயின் அவர்கள் கல்வி நிர்வாகத்தின் கீழ்தான் வரவேண்டுமென்பதுதான் நியதி. எனவே, அதற்கான நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்படுவதுடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிரந்தரமான தீர்வுகள் நியதிச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
6 minute ago
12 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
29 minute ago
36 minute ago