2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நீதிமன்றம் சென்ற பொதுமக்கள் பதிவு

Menaka Mookandi   / 2015 ஜூன் 12 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி வெள்ளிக்கிழமை (12) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குச் சென்ற பொதுமக்களை பொலிஸார் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் உட்செல்ல அனுமதித்தனர்.

நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது கடந்த மே மாதம் 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு இன்று வெள்ளிக்கிழமை (12) கொண்டுவரப்பட்டதையடுத்து, நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .