Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 22 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேச மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார வலுவூட்டல் செயலமர்வு திருநகர் வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் உளநலன் தொடர்பாக கருத்துரைகளை வழங்கிய கரைச்சிப் பிரதேச செயலக உளவள உத்தியோகத்தர் கவிப்பிரியா சதானந்தன், மாற்றுத்திறனாளிகள் தங்கள் உளநலன்களை சீராகப் பேணும் போதே அவர்கள் தங்களுக்கான தொழில் முயற்சியைப் பெற்றுக்கொள்ள அல்லது உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதுடன் தங்களுக்கான குடும்பங்களையும் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை எடுத்துக்கூறினார்.
மாற்றுத்திறனாளிகளின் தொழில் முயற்சிகள் சம்பந்தமாக கருத்துரை வழங்கிய மாவட்டச் செயலக மனிதவள உத்தியோகஸ்தர் க.கமலதாஸன், மாற்றுத்திறகாளிகள் தங்களுக்கு உரிய தொழில் முயற்சிகளை உருவாக்க முன்னர் அது தொடர்பில் பயிற்சிகளைப் பெறவேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான சரியான தொழில் முயற்சிகள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் தங்களாலான தொழில் முயற்சிகளை உதவிகளைக் கொண்டு செயற்படுத்த முடியும் என்றார்.
மாற்றுத்திறனாளிகளின் உடல்நலம் தொடர்பில் கருத்துக்கூறிய பொதுச்சுகாதார பரிசோதகர் செ.சிவகுமார், மாற்றுத்திறனாளிகள் தங்களின் உடல்நலம் தொடர்பில் அதிக அக்கறை காட்டவேண்டும். சரியான உபகரணங்களை பாவித்து தங்கள் பாதிப்புக்களில் இருந்து அவர்கள் விலகிக்கொள்ள வேண்டும்.
விபத்துக்களினால் மாற்றுத் திறனாளிகளானவர்கள் சரியான உபகரணங்கள் பாவிப்பது தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். மற்றும் நோய்கள் தொடர்பில் அதீத அக்கறை கொள்வதன் மூலம் பாதிப்புக்களில் இருந்து விடுபட்டுக் கொள்ளலாம் என்றார்.
56 minute ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
5 hours ago
8 hours ago