Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 25 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வடமாகாண கூட்டுறவு அமைச்சின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் அங்கத்தவர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்றை எதிர்வரும் 30ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ். மாவட்ட அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத் தலைவர் காரியாலயத்தில் நடத்தவுள்ளது.
இந்தப் பயிற்சிப் பட்டறையில் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.தமிழ்வாசன் கால்நடைகளுக்கான வினைத்திறனான உணவூட்டல் முறைகள் பற்றியும்;, விலங்கு வைத்திய புலனாய்வு அதிகாரி வைத்தியர் அமுதா பிரபாகரன் 'கால்நடை வளர்ப்பு தரமான பால் உற்பத்தி மற்றும் சுகாதார முறைப்படி கொள்வனவு நிலையத்துக்கு பால் வழங்கும் முறையும்' என்பது தொடர்பிலும், யாழ். மாவட்ட கூட்டுறவு சபைச் செயலாளர் திருமதி வேதவல்லி செல்வரட்ணம் 'கூட்டுறவின் வளர்ச்சிக்கு அங்கத்தவர்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும்' என்னும் விடயத்திலும் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.
1 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago