2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஜனநாயக பேராளிகள் கட்சிக்கு ஈ.பி.டி.பி வரவேற்பு

Thipaan   / 2015 ஜூலை 09 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளாக இருந்து, ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்துள்ள ஜனநாயக பேராளிகள் கட்சியின் நல்லெண்ண முயற்சி வரவேற்கத்தக்கது என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், ஜனநாயகத்தன்மை குறித்து தெளிவாகவும், உறுதியாகவும் இருந்து அக்கட்சி தொடர்ந்து செயற்படுமென தான் நம்புவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களது உரிமைகள் வெள்ளப்படவும், வாழ்வாதாரங்கள் சீராக்கப்படுவதற்கு இக்கட்சி உழைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து, இப்பேராளிகளின்; அரசியல் பிரவேசத்தை வரவேற்பதுடன், இதனூடாக முன்னேறுவதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .