2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான இருவர் விடுதலை

Menaka Mookandi   / 2015 ஜூலை 09 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2006ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவர், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் இன்று வியாழக்கிழமை (09) விடுதலை செய்யப்பட்டனர்.

மேற்படி இருவருக்கும் எதிராக சுமத்தப்பட்ட குற்றம், சரியான முறையில் சாட்சியங்கள் ஊடாக நிரூபிக்கப்படாமையால் அவர்களை விடுதலை செய்ய நீதிபதி தீர்ப்பளித்தார்.

ரி – 56 ரக துப்பாக்கி, 2 மகசின், 60 தோட்டாக்கள் ஆகியவற்றை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி நெல்லியடி பகுதியில் வைத்து ஜே.பேரின்பராசா, ரி.சதீஸ்வரன் ஆகிய இருவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1 முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டது.

இவர்களது வழக்கு 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து தவணை முறையில் நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை (09) வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .