2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மனைவியை கொலை செய்தவருக்கு மரணதண்டனை

Menaka Mookandi   / 2015 ஜூலை 09 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

சாவகச்சேரி பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்தவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற ஆணையாளர் கனகா சிவபாதசுந்தரம் மரணதண்டனை விதித்து, இன்று வியாழக்கிழமை (09) தீர்ப்பளித்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தவமணி மகான் என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது கணவர் வேலன் மகான், சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

சாவகச்சேரி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த இந்த வழக்கு கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றத்துக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் மாற்றப்பட்டது.

அந்தக் காலப்பகுதியில் யாழ்.மேல் நீதிமன்ற ஆணையாளராக இருந்த தற்போதய யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல்நீதிமன்ற ஆணையாளரான திருமதி கனகா சிவபாதசுந்தரம் முன்னிலையில் யாழ்.மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது வந்தது.

இதன் காரணமாக இன்று தீர்ப்பு வழங்கும் போது, யாழ்.மேல் நீதிமன்ற ஆணையாளராக கனகா சிவபாதசுந்தரம் மன்றில் ஆஜராகினார்.

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்தார் என்பதை சாட்சியங்கள் ஊடாக உறுதிப்படுத்திய ஆணையாளர், அவரைக் குற்றவாளியாக இனங்கண்டு மரண தண்டனை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .