Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜூலை 11 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை 3 ஆசனங்களை கைப்பற்றும் என முன்னாள் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (10) வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
விஜயகலா மகேஸ்வரன், இராஜலிங்கம் சிவசங்கர், சின்னத்துரை புலேந்திரராஜா, செபஸ்தியம்பிள்ளை மரியதாஸன், ரவீந்திரன் துகீவன், குமாரு சர்வானந்தா, இளையதம்பி நாகேந்திரராஜா, முஹமட் சுல்தான் ரஹீம், வன்னியசிங்கம் பிரபாகரன், சின்னராஜா விஜயராஜா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய விஜயம் செய்திருந்தனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago