2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

38 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Thipaan   / 2015 ஜூலை 11 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மாமுனை கடல் மார்க்கமாக இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 95 இலட்சம் ரூபாய் பெறுமதியான 38 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை சனிக்கிழமை (11) அதிகாலை கைது செய்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதானவர் மன்னார் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய நபர் என பொலிஸார் கூறினர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, பெரியபளை பகுதியில் பதுங்கியிருந்த பொலிஸார், குறித்த கஞ்சா கார் ஒன்றில் பரிமாற்றம் செய்ய முற்படும் போது கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் தப்பியோடிய இருவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைதான சந்தேக நபரை, கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .