2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வித்தியாவின் வழக்கிலிருந்து தவராசா விலகல்

Gavitha   / 2015 ஜூலை 13 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டு வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கில் ஆஜராகியிருந்த பிரபல சட்டத்தரணி கே.வி.தவராசா, இனி அந்த வழக்கில் முன்னிலையாக மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதியும் வியாபாரியுமான ஒருவர், வித்தியாவின் மரணத்தையும் வேறு சிலருடன் சேர்ந்த வியாபாரமாக்கி விசமத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இவர்கள் வித்தியாவின் தாய்க்கும் சகோதரனுக்கும் கொடுத்து வந்த அழுத்தம் காரணமாகவே சட்டத்தரணி தவராசா இந்த வழக்கில் இருந்து விலகிக்கொண்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி தவராசா வழக்கில் மறைந்துபோன பல மர்மங்கள் வெளிவரக் காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .