Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூலை 13 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறு கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்மையால் தற்போது இக்கிராமத்தில் வசிக்கும் 863 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மேற்படி கிராமத்தில் தற்போது 228 குடும்பங்களைச் சேர்ந்த 863 பேர் வரையில் வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த கிராமத்தில் குடிநீர் வசதியின்மையால் தமக்கு தேவையான குடிநீரை அயல் கிராமங்களான நாதன் திட்டம், புன்னைநீராவி, பிரமந்தனாறு ஆகிய பகுதிகளுக்கு சென்றே பெற்றுக்கொள்ள வேண்;டிய நிலை காணப்படுகின்றது.
இக்கிராமத்தின் பிரதான வீதி முதல் ஏனைய குடியிருப்பு வீதிகள் வரை எந்தவித புனரமைப்புக்களும் இன்றி மக்கள் பயணிக்க முடியாத நிலை காணப்;படுகின்றது. குறித்த வீதிகள் பருவ மழை காலங்களில் வெள்ள நீர்தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுவதனால் மக்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
குறித்த கிராமத்தில் வாழும் குடும்பங்களில் அதிகளவான குடும்பங்கள் கடற்றொழிலையே வாழ்வாதாரத் தொழிலாக கொண்ட போதும் அவற்றுக்கான போதிய வளங்கள் இன்மை மற்றும் வருடம் முழுவதும் தொழில் செய்யக்கூடிய வசதியின்மை காரணமாக வேறு தொழில்களையே நாடிச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது.
ஆரம்பத்தில் 270க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இக்கிராமத்தில் வாழ்ந்தபோதும் வசதிகள் இன்மையால் வசதி வாய்ப்புக்களைத் தேடி ஐம்பது வரையான குடும்பங்கள் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளதாக கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மேலும் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago