2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் விளக்கமறியலில்

Sudharshini   / 2015 ஜூலை 13 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் 440 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் திங்கட்கிழமை (13) உத்தரவிட்டார்.

இலங்கை மதுவரித் திணைக்களத்தின் கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட குழுவினர், கடந்த 3 நாட்களாக கிளிநொச்சி பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையில் 440 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

பாரதிபுரத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை நடவடிக்கையை கருத்திற்கொண்டு இலங்கை மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரே இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .