Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூலை 14 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்ஷ, திங்கட்கிழமை (13) தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்;ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடுவதற்கு வாய்ப்புத் தருமாறு அனந்தி சசிதரன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கோரியிருந்தார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில், அனந்திக்கு வாய்ப்புக் கொடுக்காமல் கடந்த வெள்ளிக்கிழமை (10) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல் செய்தது.
இதனையடுத்து, அனந்தி சுயேட்சையாக தனித்து போட்டியிடவுள்ளதாகவும் அதற்கான வேட்புமனுத் தாக்கல் விண்ணப்பப்படிவத்தை பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இருந்தும், அவர் நேற்று வெட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அனந்தி, 'நான் தேர்தலில் போட்டியிடுவதை கூட்;டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் விரும்பியிருந்தபோதும், தமிழரசுக் கட்சியினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக மக்களது ஆணையையும் கருத்துக்களையும் உறுப்பினர்களின் எண்ணங்களையும் மதிக்காமல் எதேச்சதிகாரமாக நடந்துகொள்கின்றது' என்றார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago