2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

காணாமல்போன கிளிநொச்சி சிறுமி; அலைபேசி பதிவுகள் ஆராய்வு

Gavitha   / 2015 ஜூலை 14 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சியில் கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி காணாமற்போன உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமி தொடர்பான விசாரணையை மேற்வதற்காக சந்தேகப்படும்படியான அலைபேசி இலக்கங்களின் தொடர்புகளை அலைபேசி நிறுவனத்தின் ஊடாக ஆராய்வதற்கு, கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், நேற்று திங்கட்கிழமை (13) அனுமதி வழங்கினார்.

சிறுமி கடத்தப்பட்டு பணத்துக்காக விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டுவரும் கிளிநொச்சி பொலிஸார், சிறுமியின் உறவினர் சிலரது அலைபேசி இலக்கங்களின் தொடர்புகளை ஆராய்வதற்கு ஏற்கெனவே நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஆராய்ந்தனர்.

தொடர்ந்து மேலும் சந்தேகப்படும்படியான நபர்களது அலைபேசி இலக்கங்களின் தொடர்புகளை ஆராய்வதற்கான அனுமதியை கிளிநொச்சி பொலிஸார் மன்றில் கோரிய நிலையில் நீதவான் அதற்கான அனுமதியை வழங்கினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .