Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 17 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள சில பிரதேசங்களை மக்களின் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்., மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
'வலி வடக்கில் 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த ஒரு பகுதி விடுவிக்கப்பட்டது. இராணுவத்தினர் 6 ஆயிரத்து 371 ஏக்கர் காணியை காணி அமைச்சின் ஊடாக பொது தேவைக்கு என சுவீகரித்துள்ளார்கள்.
ஆனால், அங்கு தமது இராணுவ முகாம்களை அமைத்துள்ளார்கள். வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றார்கள். அங்கே 13 ஆடம்பர ஹோட்டல்களை நிறுவியுள்ளார்கள். 2 மாட்டுப்பண்ணைகள் வைத்துள்ளார்கள். விவசாய நிலங்களில் இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றார்கள்.
இந்த நிலங்களை விடுவிக்க வேண்டும் என பல போராட்டங்களை நடாத்தி இருந்தோம். இந்த ஆட்சி மாற்றத்தின் ஊடாக அவை கையளிக்கப்பட வேண்டும் என கேட்டதற்கு இணங்க ஆயிரத்து 100 ஏக்கர் நிலம் ஆரம்ப கட்டமாக விடுவிக்கப்பட்டது.
அதில் சில குறைப்பாடுகள் இருந்தன. அந்த ஆயிரத்து 100 ஏக்கர் என்பது வளலாய் நிலங்களையும் உள்ளடக்கி இருந்தது. வளலாய் பகுதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த பிரதேசம் இல்லை.
சென்ற இரு வாரங்களுக்கு மீள் குடியேற்ற அமைச்சு, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் அந்த பகுதியில் விடுவிக்கப்படாத சில பிரதேசங்களை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதனடிப்படையில் சனிக்கிழமை (18) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளார்கள் யாழில் விடுவிக்கப்படாத பிரதேசங்களை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் காணப்படும் இந்த சுமூகமான நிலைமை பொது தேர்தலுக்கு பின்னரும் காணப்படுமாக இருந்தால் இராணுவத்தால் ஆக்கிரமிக்கிப்பட்டு பயன்படுத்தும் நிலங்கள் விடுவிக்கப்பட்டு மக்களை அங்கே குடியேற்றும் நிலை உருவாகும் என்ற நம்பிக்கையை நாங்கள் கொண்டுள்ளோம்.
அத்துடன் முல்லைத்தீவு பிரதேசத்தில் ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீள்குடியேற்ற அமைச்சு அனுமதி தரவில்லை. விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும்.
அதேபோன்று மன்னார், முள்ளிக்குளம் கடற்படையினரிடம் இருந்து காணிகளை விடுவிப்பது தொடர்பில் பேச்சுக்கள் நடாத்தப்பட்டு வருகின்றது. அந்த நிலமும் விரைவில் விடுவிக்கப்படும்' என மாவை மேலும் கூறினார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago