Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூலை 18 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் கொடிகாமம் பொலிஸாரால் கைத செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் 22 பேரையும் 50,000 ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல அனுமதியளித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், சந்தேகநபர்கள் அனைவரும் தினமும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு சென்று கையொப்பம் இட வேண்டும் என உத்தரவிட்டார்.
கடந்த ஜூன் மாதம் 19ஆம்; திகதி கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கசிப்பு காய்ச்சிய ஒருவரைப் பிடிக்கச் சென்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் கைதான 22 பேரும் கடந்த வழக்கு தவணைகளின் போது தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
வெள்ளிக்கிழமை (17) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணை கோரினர். இதனையடுத்து நீதவான் பிணை வழங்கினார்.
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago