Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூலை 20 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம், அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தாவினால் திங்கட்கிழமை (20) வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள கிறீன் கிறாஸ் விடுதியில் வைத்து இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.
இதனை வெளியிட்டுவைத்து உரையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, 'தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தி மக்களுக்கான நலன்சார் திட்டங்களை நிச்சயம் முன்னெடுப்போம்' என்றார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
'1977இல் நடைபெற்ற தேர்தலின் போது இதுதான் கடைசித் தேர்தல் என்றும் அடுத்த தேர்தல் தமிழீழத்தில் தான் என்றும் தமிழ்த் தலைமைகள் கூறின. ஆனால் நடந்தது என்ன?. ஆனாலும், இன்றுள்ள சூழலை தமிழ் மக்கள் நன்கு விளங்கிக்கொண்டுள்ளபடியால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் சவாலை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, அவர்கள் தற்போது மக்கள் முன் அம்பலப்பட்டுள்ளார்கள் என்பதுடன் கூட்டமைப்பினர் தொடர்பில் மக்கள் உண்மை நிலவரத்தினையும் புரிந்துகொண்டுள்ளார்கள். கடந்த காலங்களிலும் கூட்டமைப்பினரின் வெற்றுக் கோஷங்களையும் உணர்ச்சிப் பேச்சுக்களையும் நம்பி ஏமாந்தபடியால் தான், உயிரிழப்புக்களையும் பேரவலங்களையும் மக்கள சந்தித்திருந்தனர்.
அத்துடன், கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களும் சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதைப் போன்று மக்கள் நலன்சார்ந்த விடயங்களையும் செயற்றிட்டங்களையும் நடைமுறைப்படுத்துவோம் என்று டக்ளஸ் தேவானந்தா மேலும் சுட்டிக்காட்டினார்.
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago