2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தம்பிராசாவின் மகனை காணவில்லை

Menaka Mookandi   / 2015 ஜூலை 24 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசாவின் மகன் திருவளவன் (வயது 18) என்ற இளைஞனை நேற்று வியாழக்கிழமை (23) மாலை 2 மணி முதல் காணவில்லையென அவரது தந்தையால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண நகரத்திலுள்ள தனது அலுவலகத்தில் இருந்து, அரசியல் பணியை மேற்கொண்டிருந்த தனது மகன் காணாமற்போயுள்ளதாக தந்தை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
 
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .