2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு பிணை

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

தேர்தல் விதிமுறைகளை மீறி கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிய 2 பேரையும் தலா 25 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், இன்று புதன்கிழமை (12) உத்தரவிட்டார்.  
 
கட்சி ஒன்றுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டிய இருவர், கிளிநொச்சி பொலிஸாரால் நேற்று செவ்வாய்கிழமை (11) இரவு கைது செய்யப்பட்டனர்.
 
கைது செய்யப்பட்ட இருவரும், தமது கட்சியைச் சேர்ந்தவர்களாலேயே தாம் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக நீதவானிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X