2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

புங்குடுதீவு விவகாரம்: கொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள்; 9 பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், புதன்கிழமை (12) உத்தரவிட்டார்.

பயங்கரவாத தடுப்புச் சட்;டத்தின் கீழ் கடந்த 60 நாட்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட 9 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, 4ஆவது சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட மூக்குக்கண்ணாடி மாணவி பயன்படுத்திய மூக்குக்கண்ணாடியா? என்ற விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் அறிக்கையும், மூக்குக்கண்ணாடியையும் ஒப்படைக்க வேண்டும் என நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவி கடந்த மே மாதம் 13ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X