2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

விபத்தில் 3 பிள்ளைகளின் தந்தை பலி

George   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் புதன்கிழமை (12) இரவு சைக்கிளில் சென்றவரை வாகனம் ஒன்று மோதியதில்சைக்கிளில் சென்றவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த விசாசித்தம்பி தெய்வநாதன் (வயது 40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உறவினர் ஒருவருடைய வீட்டில் குழாய்க் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டுவிட்டு, வீடு சென்றுகொண்டிருந்த இவரை வீதியில் சென்ற வாகனம் மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடந்த இவரை, அவரது உறவினர்கள் மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அதனையடுத்து, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றும்போது உயிரிழந்துள்ளார்.

சடலம், யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X