2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

யாழில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தென்னிந்திய கலைஞர்கள்

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். மாநகரசபை மைதானத்தில் வியாழக்கிழமை (13) மாலை இடம்பெற்ற சுயேட்சைக் குழு  6இன்   தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தென்னிந்திய கலைஞர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

தென்னிந்தியாவின் பிரபல பாடகர்களான ஹரிஸ் ராகவேந்திரா, மால்குடி சுபா மற்றும் ரி.எம்.சௌந்தரராஜனின் மகன் ரி.எம்.எஸ்.செல்வம் ஆகிய பாடகர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அத்துடன், தமிழ்த் திரைப்பட பிரபல நகைச்சுவை நடிகரான செந்தில் மற்றும் வடிவேல் பாலாஜி ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

நடிகர் செந்தில் ஆயிரக்கணக்கான மேடை நிகழ்வுகளில் இதுவரை பங்கு பற்றி இருந்த போதும் திரையுலக நிகழ்வுகளில் பங்கு பற்றும் போதும் தனது மனைவியை அழைத்துச் செல்வதில்லை. எனினும், யாழ்ப்பாணத்துக்கு முதன் முதலாக தன்னுடன் அழைத்து வந்ததுடன் தனது மனைவியையும் மேடையில் ஏற்றி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதேவேளை மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும் திரைப்பட நடிகருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் மேடையில் எம்.ஜி.ஆர் பாடல்களுக்கு எம்.ஜி.ஆர் போன்றே நடனமாடினார்.

இதன்போது, தென்னிந்தியாவில் இருந்தே இசைக்குழுவினரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் தென்னிந்திய திரையுலகத்தினர் இலங்கைக்கு வருவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகள் தோன்றியிருந்தமை குறிப்படத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X