2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

18 முதிரை மரக்குற்றிகளுடன் படி ரக வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது

Thipaan   / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

பதினெட்டு முதிரை மரக்குற்றிகளுடன் படி ரக வாகனத்தினை வியாழக்கிழமை (13) இரவு இயக்கச்சி பகுதியில் கைப்பற்றியுள்ளதாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்டது, இயக்கச்சி பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்ட பொலிஸார், குறித்த வடிரக வாகனத்தினை மறித்துள்ளனர்.

சாரதி 100 மீற்றர் தூரத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

முதிரை மரக்குற்றிகளுடன் கைவிடப்பட்ட வாகனத்தினை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், சாரதியினை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X