Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 07 , பி.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம். றொசாந்த், என். ராஜ், எஸ். தில்லைநாதன்

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 21 இந்தியாவின் தமிழ்நாடு மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்புக்குள் அத்துமீறி இரண்டு படகுகளில் நுழைந்த 21 தமிழக மீனவர்களை வடமராட்சி மீனவர்கள் சுற்றி வளைத்து தடுத்து வைத்திருந்தனர்.
வடமராட்சி மீனவர்களிடமிருந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பொறுப்பெடுத்து, தமிழக மீனவர்களை கைது செய்தனர்.
அன்றைய தினம் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மறுநாள் 1ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை நேற்று வரையில் விளக்க மறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
அந்நிலையில் குறித்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது, 21 மீனவர்களையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளால் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது. இதற்கு அவர்களிடம் வாக்குமூலம் பெறவதற்கு அனுமதி வழங்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு மன்று உத்தரவிட்டது.
மேலும் அவர்களின் வள்ளங்களில் இருந்து மீட்கப்பட்டு பதப்படுத்திய நிலையில் உள்ள சுமார் 100 கிலோ கிராம் மீனை விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்த மன்று விற்பனை செய்யும் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்துமாறு கட்டளை பிறப்பித்துள்ளது.
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago